மல்லையா-அருண்ஜெட்லி சந்திப்பு…!!!
பல கோடியை சூட்டிய நாட்டை விட்டு வெளியே செல்லும் முன்பு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து நிலைமையை சரி செய்ய முயற்சித்தேன் – விஜய் மல்லையா என்று விஜய் மல்லையா பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்தேன்.வங்கிக்கடன்களை செலுத்த தான் முன் வைத்த திட்டத்தை அவை ஏற்க மறுத்துவிட்டன கிங் ஃபிஷர்ஸ் விமான நிறுவனத்தால் ஏற்பட்ட நஷ்டம் பற்றி தெரிவித்ததாகவும் மல்லையா தகவல் தெரிவித்தார்.
நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.ஐ. உள்ளிட்ட வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி விட்டு அதை திரும்பச் செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையா, லண்டன் தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தக் கோரி இந்திய அரசு தொடர்ந்த வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
விஜய் மல்லையாவை மும்பை சிறையில் அடைக்கவுள்ளதாக வாதிடப்பட்ட நிலையில், அங்கு போதிய காற்றோட்டம், வெளிச்சம் இருக்காது என விஜய் மல்லையா தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.இதைக் கேட்ட நீதிபதி, விஜய் மல்லையாவை அடைக்கவுள்ள சிறையின் வீடியோவை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.
இதன்படி சிறையில் உள்ள வசதிகள் குறித்த வீடியோ காட்சிகள் புதனன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அப்போது நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, கடனை திரும்பச் செலுத்த தாம் தயாராக இருந்த போதும் வங்கிகள் அதை ஏற்றுக் கொள்ளாமல், தமது கடன் தீர்வு விண்ணப்பத்திற்கு நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவித்ததாகவும் கூறினார்.
மேலும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாகவும், ஆனால் அந்த விவரங்களை வெளியிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
அமலாக்கதுறையால் தேடும் குற்றவாளியாகவும்,வெளிநாட்டிற்கு தப்பி சென்றவருமான விஜய் மல்லையா தப்பி செல்லும் முன் நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்துள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU