ஆந்திராவில் மறைந்த கணவருக்கு கோவில் கட்டி வழிபட்ட மனைவி.
ஆந்திராவில், பிரகாசம் மாவட்டத்தில் பத்மாவதி என்ற பெண் அங்கிரெட்டி என்பவரை திருமணம் செய்தார். இருவரும் பாசப்பறவைகளாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பதாக அங்கி ரெட்டி விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார். கணவர் உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல், தினமும் வருந்தி வந்த இவர், தனது கணவர் தன் அருகிலேயே இருப்பதாக உணர்ந்தாலும், அங்கி ரெட்டி தனக்கு கோயில் கட்டும்படி சொன்னதாலும் தான் இந்த கோவிலை கட்டியதாகவும் பத்மாவதி கூறியுள்ளார்.
இந்த கோவிலில் தனது கணவரை பளிங்கு உருவ சிலையாக அவர் நிறுவியுள்ளார். இந்நிலையில் அவரது கணவரின் பிறந்த நாள், நினைவு நாள் ஆகிய சிறப்பு நாட்களில் அவரது சிலைக்கு பூஜை செய்து வழிபாடு நடத்துகிறார். கோவில் கட்டி வழிபாடு நடத்துவதோடு நின்றுவிடாமல், பௌர்ணமி அன்று ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார். மறைந்த தனது கணவருக்கு கோவில் கட்டி வழிபடும் இந்தப் பெண்ணின் செயல் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…