மர்ம பழங்களை உட்கொண்ட சிறுவர்கள் 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை…!!

Default Image
பஞ்சாப்பில் வினோத மரத்தில் இருந்து பழங்களை உட்கொண்ட 9 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் பாட்டிலா என்ற கிராமத்தில் வினோத மரம் உள்ளது. இந்நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் விளையாட்டாக அந்த மரத்தில் இருந்த பச்சை நிறத்தில் உள்ள பழங்களை உட்கொண்டனர். அதனை தொடர்ந்து உட்கொண்ட  சிறிது நேரத்தில் அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது.
வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சஞ்சீவ் பல்லா கூறுகையில்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 9 சிறுவர்களில் 1 சிறுவனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவர்கள் உட்கொண்ட பழங்களை குறித்து டாக்டர்கள் குழு தீவிர பரிசோதனை நடத்தி வருகின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்