“மரண தண்டனை” இரட்டை குண்டுவெடிப்பு தீர்ப்பு..!!

ஹைத்ராபாத் ,

ஹைத்ராபாதில் உள்ள கோகுல் சாட் ஹோட்டலில் 2007 ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி, பயங்கரவாதிகளால் மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில், 32 அப்பாவி பொதுமக்கள் உடல்சிதறி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து, அடுத்த 5 நிமிடத்திலேயே ஹைதராபாத் தலைமைச்செயலகம் அருகேயுள்ள, லும்பினி பார்க் திறந்தவெளித் திரையரங்கத்தில் குண்டு வெடித்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த இரட்டை குண்டு வெடிப்பால், 52-க்கும் அதிகமான பொதுமக்கள் தங்கள் கை, கால்களை இழந்தனர்.

இந்தக் குண்டு வெடிப்பு தொடர்பாக இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த, ஷாஃபிக் சையத், முகமது ஷாதிக், அன்சார் அகமது, அக்பர் இஸ்மாயில், உள்ளிட்டோரை மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், கடந்த 2008-ம் ஆண்டு கைதுசெய்தனர்.  இதையடுத்து, அவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, செர்லப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை, ஹைதராபாத் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. வழக்கு தொடர்பாக 170 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

இதில்  வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பரூக் சப்ருதீன் தர்காஷ், முகமது சதீக் இஸ்ரர் அகமது சேக் ஆகியோருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவர்களை நீதிபதி விடுவித்தார்.

இந்நிலையில், குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 3 பேருக்கும் தண்டனை விவரங்களை நீதிபதி சீனிவாச ராவ் அறிவித்தார். இதில் அனிக் சபிக் சயீத் மற்றும் முகமது அக்பர் இஸ்மாயில் சவுத்ரி ஆகியோருக்கு மரண தண்டனையும், இவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக தாரிக் அஞ்சுமுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தார்.

DINASUVADU 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்