மரணத்திலும் பிரியாத தம்பதிகள் : ஒரே இடத்தில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்…!!

Default Image
ஆந்திராவில் நீதிபதி ஒருவர் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது மனைவியும் அதே இடத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே திருச்சானூரில் வசித்து வந்த சுதாகர் (வயது 62). நீதிபதியாக பதவி வகித்து ஓய்வு பெற்ற இவர் சமீபகாலமாக கடுமையாக உடல் பாதிக்கப்பட்டு இருந்தார். பல்வேறு சிகிச்சைகள் எடுத்தபோதிலும் அவருக்கு குணம் ஏற்படவில்லை.இதனால் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி இருந்த அவர் நேற்று காலை ரேணிகுண்டா – திருப்பதி இடையே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தனது மரணத்துக்கான காரணத்தை கடிதமாக எழுதி வைத்திருந்தார். அவரது உடலை கைபற்றிய போலீஸார் அந்த கடிதத்தையும் பறிமுதல் செய்தனர்.

அதில் உள்ள விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை. ஓய்வு பெற்ற நீதிபதி சுதாகரின் உடல் உடனடியாக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உடனடியாக அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். பிரேத பரிசோதனை முடிந்து உடலை பெற்றுக் கொள்ளுவதற்காக அங்கு காத்திருந்தனர். இதனிடையே சுதாகரின் மனைவி வரலட்சுமி (வயது 58) கணவன் இறந்த செய்தி கேட்டு மயமக்கமடைந்தார். அவருக்கு உறவினர்கள் முதலுதவி அளித்து ஆறுதல் கூறினர்.

சுதாகரின் உடலை பெறுவதற்காக உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது பெரும் அதிர்ச்சியில் இருந்த வரலட்சுமி திடீரென கிளம்பி கணவன் உயிரிழந்த பகுதிக்கு சென்றார். நேற்று இரவு அதே இடத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார்.
கணவரும் மனைவியும் அடுத்தடுத்து ஒரே இடத்தில் தற்கொலை செய்து கொண்டதால் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கணவனும் மனைவியும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்