Mamata Banerjee: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி படுகாயம் அடைந்துள்ளதாக திரிணாமூல் காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளார்.
வரும் மக்களவை தேர்தலில் ‛இந்தியா’ கூட்டணியில் இருந்தாலும் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியை பிரிந்து திரிணாமுல் காங்கிரஸ் தனித்து களமிறங்குகிறது. அங்குள்ள 42 தொகுதிகளுக்கும் மம்தா பானர்ஜி தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இந்நிலையில் மம்தா பானர்ஜி இன்று நெற்றியில் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் ‛‛நம்முடைய தலைவர் மம்தா பானர்ஜி தீவிர காயமடைந்துள்ளார். அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவில் மம்தா பானர்ஜிக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. அதே நேரம் அவர் விபத்தில் சிக்கியதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து மம்தா விரைவில் குணமடைய வேண்டும் என பலரும் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “மாண்புமிகு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாலை விபத்தில் சிக்கியது குறித்து அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்தேன். இந்த கடினமான நேரத்தில் என் எண்ணங்கள் அவருடன் உள்ளன, மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…