ஆந்திர மாநிலம் விஜய நகரம் மாவட்டம் வெங்கம் பேட்டா என்ற இடத்தைச் சேர்ந்தவர் நரசய்யா. இவரது மனைவி ரவணம்மா. இவர்களுக்கு திருமணமாகி 28 வருடங்கள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி கணவன்- மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நரசய்யா மனைவியை சரமாரியாக தாக்கியதில் அவர் பலியானார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நரசய்யா மனைவி பிணத்தை வீட்டுக்குள் குளியல் அறையின் அடியில் பள்ளம் தோண்டி புதைத்து விட்டார்.
குழந்தைகளும் அக்கம் பக்கத்தினரும் கேட்டபோது ரவணம்மா தன்னுடன் சண்டை போட்டதாகவும், கோபித்துக் கொண்டு காணாமல் போய் விட்டதாகவும் கூறி நாடகம் ஆடினார். போலீசிலும், உறவினர்களிடமும் இதையே தெரிவித்தார்.
ஆனால் போலீசுக்கு கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை ரகசியமாக கண்காணித்தனர். பல மாதங்கள் ஆகியும் பதட்டத்துடனேயே காணப்பட்ட அவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டார்.
8 மாதங்களுக்கு பின்பு நரசய்யாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் குளியல் அறையின் அடியில் புதைக்கப்பட்ட ரவணம்மா பிணத்தை போலீசார் தோண்டி எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல்,…
சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…
சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம்…
டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும்…
சென்னை : எம்கேபி நகர் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, கலைஞர் தெரு, மங்களபுரி, மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை பிரதான சாலை,…