மனைவியின் பிரசவ செலவுக்காக குழந்தை விற்பனை….!!
உத்தரபிரதேசம் ,
உத்திரபிரதேசம் மாநிலம் கன்னாஜ் என்ற இடத்தில் மனைவியின் பிரசவ செலவுக்காக, பெற்ற குழந்தையை தந்தையே விற்பனை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். மனைவியின் பிரசவத்திற்கு பணம் இல்லாமல் தவித்த அந்த நபர், கடந்த ஆண்டு பிறந்த குழந்தையை, 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முன்வந்தார்.
குழந்தையை விற்பனை செய்ய முயன்ற செய்தி அறிந்ததும் உடனே காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.இதில் மனைவியின் பிரசவ செலவு மற்றும் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் அந்த நபருக்கு போலீஸ் செய்து வருகின்றனர்.
பெற்ற தந்தையே இவ்வாறு செய்தது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
DINASUVADU