மத்திய ரிசர்வ் போலீஸ் படை புதிய முடிவு!நக்சலைட்டுகளுக்கு எதிரான தாக்குதலில் இளம் வீரர்கள்!
மத்திய ரிசர்வ் போலீஸ் படை,நக்சலைட்டுகளுக்கு எதிரான தாக்குதலில் இளம் வீரர்களை ஈடுபடுத்த முடிவு எடுத்துள்ளது.
சத்தீஷ்கர் மாநிலத்தில் பணியாற்றும் அந்த படையைச் சேர்ந்த 45 முதல் 50 வயதான வீரர்கள் 12 ஆயிரம் பேரை வேறு பணிகளுக்கு மாற்றுவது என்றும் அவர்களுக்கு பதிலாக புதிதாக பயிற்சி பெற்ற 18 முதல் 25 வயது வரையிலான வீரர்களை நக்சல் வேட்டையில் ஈடுபடுத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று காஷ்மீர் மாநிலத்திற்கு 6000 இளம் வீரர்களை அனுப்பவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இயக்குநர் ஜெனரல் ஆர்.ஆர்.பட்னாகர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.