மத்திய பிரதேசத்தில் நான்கு வயது சிறுமி பாலியல் பலாத்காரம்!மேல் சிகிச்சைக்காக உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு!
மத்திய பிரதேசத்தில் நான்கு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் இன்று மேல் சிகிச்சைக்காக அவரது உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தனி விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டடது.
மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள சட்னா என்ற மாவட்டத்தில் நேற்று முன்தினம்(ஜூலை 1) அவரது பெற்றோருடன் நான்கு வயது சிறுமி வீட்டில் உறங்கிகொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் சிறுமியை தூக்கிச்சென்றான்.பின்னர் சிறுமியை பாலத்காரம் செய்து விட்டு செடிகள் நிறைந்த பகுதியில் வீசிவிட்டு சென்றான்.பின்னர் அந்த சிறுமியின் குடும்பத்தினர் அவரை உயிருக்கு போராடிய நிலையில் கண்டனர்.இதைக்கண்ட பெற்றோர் சிறுமியை மருத்துவ மனையில் அனுமதித்தனர்.இந்நிலையில் நேற்று சிறுமியின் உடல் மிகவும் மோசமான நிலைமைக்கு ஆனது.இதனையடுத்து இன்று நான்கு வயது சிறுமி மேல் சிகிச்சைக்காக அவரது உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தனி விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டது.