மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ்..!பதவியேற்றவுடன் விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்த..!!முதல் கையெழுத்து..!!அதிரடி ஆரம்பம்..!
மத்திய பிரதேச மாநில முதல்வராக பதவியேற்ற கமல்நாத் காங்கிரஸ் மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி இன்று விவசாயிகளின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து தன்னுடைய முதல் கையெழுத்திட்டுள்ளார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது இதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று தனது ஆட்சியை அங்கு அமைத்துள்ளது. அதன்படி மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாநிகழ்ச்சியில் அம்மாநில பாஜகவின் முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுஹான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பதவியேற்பு விழாவை தொடர்ந்து தலைமைச் செயலகம் வந்த கமல்நாத் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற உடன் முதல் கையெழுத்தாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இதனால் அம்மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்தது போல இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.