மத்திய பிரதேசத்தில் அடுத்த முதல்வர் யார்…! காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் தொடக்கம் …!

Published by
Venu

 மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது.

நேற்று காலை முதல் 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இந்நிலையில் 22 மணி நேர வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்தது. வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் 
பாஜக 109 இடங்களிலும்,பகுஜன் சமாஜ் கட்சி இரு தொகுதிகளை வென்றுள்ளது. சமாஜ்வாதி கட்சி ஒரு தொகுதியில் வென்றுள்ளது. 4 தொகுதிகளை சுயேச்சைகள் கைப்பற்றி உள்ளனர்.

அறுதிப் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு குறைந்தபட்சம் 116 எம்எல்ஏக்கள் பலம் தேவை. எனவே மத்திய பிரதேசத்தில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலை எழுந்தது.

ம.பி.யில் பேரவை தேர்தல் முடிவில் பின்னடைவை சந்தித்தாலும் வாக்குகளில் முன்னிலை பெற்றது பாஜக .ஒட்டு மொத்தமாக பாஜக 41% (1,56,42,980) வாக்கு, காங்கிரஸ் 40.9% (1,55,95,153) வாக்கு பெற்றது.ம.பி.யில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 47,827 ஆகும்.

இந்நிலையில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவிப்பு வெளியிட்டார் .அதில் பாஜக மீதான அதிருப்தியின் காரணமாகவே மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். பாஜக பட்டியல் இன மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ் ஆதரவு அளிக்கும் என்றும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.மேலும் தேவைப்பட்டால் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் ஆனந்திபென் பட்டேல்.

மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் ஆனந்திபென் படேலிடம் உரிமை கோரியது காங்கிரஸ் கட்சி.கமல்நாத், திக்விஜய் சிங் உள்ளிட்டோர் ஆளுநரிடம் உரிமைகோரல் கடிதத்தை அளித்தனர்.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் மத்தியப்பிரதேச முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Venu

Recent Posts

இந்தியாவில் நுழைந்த HMPV வைரஸ்.. அறிகுறிகள், தடுக்கும் வழிகள் என்னென்ன?

இந்தியாவில் நுழைந்த HMPV வைரஸ்.. அறிகுறிகள், தடுக்கும் வழிகள் என்னென்ன?

டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும்…

16 minutes ago

தமிழகத்தில் செவ்வாய்கிழமை (07/01/2025) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : எம்கேபி நகர் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, கலைஞர் தெரு, மங்களபுரி, மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை பிரதான சாலை,…

27 minutes ago

ஜன 11-ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்! ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு!

சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில், ஆளுநர் உரையாற்றவிருந்தார்.…

1 hour ago

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று – ஐசிஎம்ஆர் அறிவிப்பு!

டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு ஹ்யூமன் மெட்டாப்நியூமோ (HMPV) வைரஸ் தொற்று இருப்பதை இந்திய மருத்துவ…

1 hour ago

சட்டப்பேரவை உரையை புறக்கணித்த ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்! – அமைச்சர் சிவசங்கர்

சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்கியது. ஆளுநர்…

2 hours ago

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய விவகாரம்.. ராஜ்பவன் விளக்கத்தில் மாற்றம் என்ன?

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை 2025 ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கிய நிலையில்,…

2 hours ago