மத்தியில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்கள் மட்டுமே இடைவெளி உள்ளது. எனவே அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் இப்போதே தயாராகி வருகின்றன.
பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதற்கு தேர்தல் முன்னேற்பாடு பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது.
ஆட்சியில் தாங்கள் செய்த சாதனைகளை மக்கள் முன் சொல்லித்தான் ஓட்டு வாங்க முடியும். எனவே மத்திய அரசு இதுவரை நிறைவேற்றி உள்ள திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்து வருகிறார். குறிப்பாக அவர் அறிவித்த மிக முக்கிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்கிறார்.
ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள முத்ரா கடன் வழங்கும் திட்டம், உஜ்வாலா கியாஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம், விவசாயிகளுக்கான மானிய திட்டம் ஆகியவை சரியான முறையில் செயல்படுகிறதா? என்றும் அவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இது சம்பந்தமான அனைத்து விவரங்களையும் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பும்படி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை மிக முக்கியமாக கருதி பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் அந்த திட்டம் சரியாக நடைமுறைக்கு வரவில்லை. இது பிரதமரை கவலையடைய செய்துள்ளது.
இதுபோல அல்லாமல் மற்ற திட்டங்கள் எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் கருதுகிறார். எனவே அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…