மத்திய குழு நாளை கேரளா செல்கிறது .. வெள்ள சேதங்களை பார்வையிட..
கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மிக கனத்த மழை கேரள மாநிலம் முழுவதும் பெய்து வருகிறது.
கடந்த மே மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழைக்கு ஜூலை 9-ந்தேதி வரை 39 பேர் உயிரிழந்து இருந்தனர். அதன் பிறகு மழை அதிகரித்ததால் பலி எண்ணிக்கை 116-ஐ தொட்டுவிட்டது. நேற்று மட்டும் ஆலப்புழா, பத்தனம் திட்டா, வயநாடு, அடூர் ஆகிய இடங்களில் 2 வயது குழந்தை உள்பட 4 பேர் இறந்துள்ளனர்.
மேலும் 3 நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை தீவிரமடைந்து உள்ளதால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். அதனால் இன்று நடைபெற இருந்த மகாத்மாகாந்தி பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இதனால் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய மந்திரி ரிஜ்ஜூ தலைமையில் 31 பேர் அடங்கிய மத்திய குழு நாளை கேரளா செல்கிறது