மத்திய கல்வி நிறுவனங்களில் ஒன்று வி.எம்.எம்.சி. வர்த்தமான் மகாவீரர் மருத்துவ கல்லூரி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனை ஆகும். இந்த கல்வி நிறுவனம்- மருத்துவமனை புதுடெல்லியில் இயங்குகிறது. மத்திய குடும்ப நலத்துறையின் கீழ் செயல்படும் இந்த கல்வி நிறுவனத்தில் தற்போது ஸ்டாப் நர்ஸ், ஜூனியர் ரெசிடன்ட், உதவி பேராசிரியர் போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 1268 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் ஸ்டாப் நர்ஸ் பணிக்கு 932 இடங்களும், ஜூனியர் ரெசிடென்ட் பணிக்கு 234 இடங்களும், உதவி பேராசிரியர் பணிக்கு 102 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்…
ஸ்டாப் நர்ஸ்
ஸ்டாப் நர்ஸ் பணிக்கு 932 இடங்கள் உள்ளன. ஜெனரல் நர்சிங், மிட்வைப்பரி, டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் மற்றும் பி.எஸ்சி. நர்சிங் படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. விண்ணப்பதாரர்கள் 1-1-2018-ந் தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 35 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
இந்த பணிகள் நேரடி நேர்காணல் மூலம் நிரப்பப்படுகிறது. 10-6-2018-ந் தேதி இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. 25-6-2018-ந் தேதி நேர்காணல் நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்துவிட்டு, நேர்காணலில் பங்கேற்கலாம்.
ஜூனியர் ரெசிடென்ட் பணிகள்
மற்றொரு அறிவிப்பின்படி ஜூனியர் ரெசிடென்ட் பணிக்கு 234 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பொதுபிரிவினர் ரூ.500-ம், ஓ.பி.சி. பிரிவினர் 250-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை, 9-6-2018-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரிக்கு சென்றடையும்படி அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன், தேவையான சான்றுகளை சுய சான்றொப்பம் செய்து இணைக்க வேண்டும்.
உதவி பேராசிரியர் பணிகள்
இன்னொரு அறிவிப்பின்படி உதவி பேராசிரியர் பணிக்கு 102 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. எம்.பி.பி.எஸ். மருத்துவப்படிப்புடன், குறிப்பிட்ட பிரிவில் முதுநிலை மருத்துவம் சிறப்பு படிப்பாக படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அனஸ்தீசியா, கார்டியாலஜி, கிளினிகல் ஹேமாடாலஜி, பாரன்சி மெடிசின், மைக்ரோ பயாலஜி, நெப்ராலஜி, நியூராலஜி, நியூரோ சர்ஜரி, நியூக்ளியர் மெடிசின், பார்மகாலஜி, பல்மோனரி மெடிசின், ரேடியோலஜி, சர்ஜரி, யூராலஜி, மெடிசின், சி.டி.வி.எஸ்., பர்ன்ஸ் அன் பிளாஸ்டிக் போன்ற மருத்துவ பிரிவுகளில் பணிகள் உள்ளன.
நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. வருகிற 11, 15,18, 22, 25, 29-ந் தேதிகள் மற்றும் ஜூலை 2, 3, ஆகிய நாட்களில் நேர்காணல் நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் முழுமையான விவரங்களை படித்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
இவை பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள www.vmmc.sjh.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும்…
டெல்லி : அரசு வேலை வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி, அதிமுவின் இரட்டை இலை சின்னத்தை…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி…
சென்னை: 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' அதுவே 'போக்கி' பண்டிகை என்றாகி தற்போது போகி என மருவியுள்ளது. சென்னையில் பல்வேறு…
ராஜ்கோட்: மகளிருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில்இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள்…
கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில்…