மத்திய அரசு புதிய முடிவு!குளீர் சாதன பெட்டிகளில் மின்சாரத்தை சிக்கனப்படுத்த இயல்பு நிலை அளவீட்டை மாற்ற முடிவு!

Default Image

மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் விதமாக குளிர்சாதன நிறுவனங்களுக்கு  மத்திய மின்சாரத்துறை அமைச்சகம் புதிய ஆலோசனை ஒன்றை வழகியுள்ளது.

தற்போது   குளீர் சாதன பெட்டிகள் (a.c) ஹோட்டல்கள்  மற்றும் அலுவலகங்களில்  18 முதல் 21 டிகிரி செல்சியஸ்  வரை பயன்படுத்தப்படுறது.இதன்படி குளிர்சாதனத்தின் இயல்பு  நிலை அளவீட்டை(default) ஒவ்வொரு டிகிரியாக உயர்த்தும் போதும் 6 % வரை மின்சாரம் சிக்கனப்படுத்தப்படுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது .இதனால் மின்சாரத்துறை அமைச்சகம்  குளிர்சாதன உற்பத்தி  நிறுவனங்களுக்கு புதிய ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளது.

இதற்காக குளிர்சாதன உற்பத்தி  நிறுவனங்களுடன் மத்திய மின்சாரத்துறை அமைச்சக அதிகாரிகள் நடத்திய  ஆலோசனை கூட்டத்தில், குளிர்சாதனங்களுக்கு 24 முதல்  26 டிகிரி செல்சியஸ் அளவீடு கொண்ட குளிர்சாதனத்தை உற்பத்தி செய்யும் படி ஆலோசனை வழங்கியுள்ளது.

இதேபோல் ஜப்பானில் மட்டும் குளிர்சாதனங்களின் இயல்பு நிலை அளவீடு 28 டிகிரி செல்சியஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்