உச்சநீதிமன்றம் ,நீதிபதி கே.எம்.ஜோசஃபை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் கொலீஜியம் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு திருப்பி அனுப்பியதில் தவறில்லை என்று கூறியுள்ளது.
உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் கே.எம்.ஜோசஃபையும், மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ராவையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்குமாறு, இந்த ஆண்டு தொடக்கத்தில் கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதில் இந்து மல்ஹோத்ராவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதேசமயம், கே.எம்.ஜோசஃப் பெயரை மறுபரிசீலனை செய்யுமாறு கொலீஜியத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு மத்திய சட்ட அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், அகில இந்திய அளவிலான சீனியாரிட்டி பட்டியலில் கே.எம்.ஜோசஃப் 42 ஆவது இடத்தில் இருப்பதாகவும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் 11 பேர் அவருக்கு சீனியர்களாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் தலைமை நீதிபதியாக கே.எம்.ஜோசஃப் தலைமையிலான அமர்வு, 2016ஆம் ஆண்டில், அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் உத்தரவை ரத்து செய்தது.
இதன் மூலம் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுத்துவிட்டதால், கே.எம்.ஜோசஃபை பழிவாங்கும் வகையில் கொலீஜியம் பரிந்துரையை மத்திய அரசு ஏற்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தும் கே.எம்.ஜோசஃப் நியமனத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதால், இந்து மல்ஹோத்ராவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என இந்திரா ஜெய்சிங் என்ற மூத்த வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இது நினைத்துப்பார்க்கவோ ஏற்கவோ முடியாத கோரிக்கை என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் கான்வில்க்கர் (A M Khanwilkar), சந்திரசூட் (D Y Chandrachud) அமர்வு, இதுபோன்ற கோரிக்கைகளை கேள்விப்பட்டதில்லை என்றும் கூறியது. அரசமைப்புச்சட்டப்படி இந்து மல்ஹோத்ரா நியமனம் என்பது நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று என்றும் கூறி இந்திரா ஜெய்சிங் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
மேலும், மத்திய அரசு அதன் உரிமை வரம்புகளுக்குள் நின்றே, பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்பியிருப்பதாகவும், இதை உச்சநீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அரசமைப்புச் சட்டத்தின்படி கொலீஜியம் கையாளும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனிடையே, கொலீஜியத்தின் ஒரு பரிந்துரையை ஏற்று, மற்றொரு பரிந்துரையை நிராகரித்திருப்பதன் மூலம் மத்திய அரசு நீதித்துறையின் செயல்பாடுகளில் தலையிடுவதாக, உச்சநீதிமன்ற பார் கூட்டமைப்பு தலைவர் விகாஸ்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு (9ஆம்…
சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…
கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் "கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது" என்று பரபரப்பட்டு வரும்…
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…