மத்திய அரசு காவிரி விவகாரத்தில் தமிழக அரசை கண்டு பயப்படவேண்டாம் …!
கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழகத்தின் அழுத்தத்திற்கு மத்திய அரசு பணியக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் இன்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தின் அழுத்தத்திற்கு மத்திய அரசு பணியக்கூடாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி விழாவில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.