கார் விபத்தில் தன்னை கொல்ல முயற்சி நடந்ததாக மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே குற்றம்சாட்டினார் .
போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய அந்த லாரி பா.ஜ பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இதையடுத்து அனந்தகுமார் ஹெக்டே பத்திரிகையாளர் கூட்டத்தை ரத்து செய்தார். கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜ தலைவர் அமித்ஷாவின் முகத்தில் தோல்வி பயத்தை பார்க்க முடிகிறது. பசவண்ணர் சிலைக்கு அவர் மாலை அணிவித்தபோது, அந்த மாலை கீழே விழுந்துவிட்டது.
அமித்ஷாவை பசவண்ணர் நிராகரித்துவிட்டார் என்பதற்கான அடையாளமே இந்த நிகழ்வு ஆகும். கர்நாடகத்தில் தேர்தலை எதிர்கொள்ள பாஜவில் பெரிய தலைவர்கள் இல்லையா?. முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா மீது பா.ஜ நம்பிக்கை இல்லையா? எதற்காக அக்கட்சி வெளி மாநிலங்களில் இருந்து தலைவர்களை வரவழைத்து பேச வைக்கிறார்கள்? நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு கர்நாடகத்தில் இருந்து வெளிமாநிலத்தை சேர்ந்த ஒருவரை பா.ஜ எம்.பி.யாக தேர்ந்து எடுத்துள்ளது. கர்நாடகத்தில் கன்னடர்கள் யாரும் அந்த பதவிக்கு தகுதியானவர்கள் இல்லையா?.
கர்நாடகத்திற்கு மத்திய அரசு ஏராளமான நிதி உதவி வழங்கியதாக அமித்ஷா சில விவரங்களை கூறி இருக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசு கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,435.95 கோடி வழங்கியது. ஆனால் பா.ஜனதா ஆளும் மாநிலங்களான மராட்டிய மாநிலத்திற்கு ரூ.8,195 கோடி, குஜராத்திற்கு ரூ.3,894 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.2,153 கோடி ஒதுக்கப்பட்டது. வறட்சி நிதி ஒதுக்கியதில் மத்திய அரசு கர்நாடகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியுள்ளது என்று அகில இந்திய காங்கிரஸ் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா சதுர்வேதி கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…