மோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அளவுகளைத் தாண்டி பல நன்மைகள் செய்துள்ள நிலையில், 2019 பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு மத்திய அரசுப் பணியில் இருக்கும் 1 கோடி வாக்குகளைப் பெற வேண்டும் என்ற திட்டத்துடன் வருகிற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மோடி முக்கியமான அறிவிப்பை அளிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுதந்திர தினம் பிரதமர் மோடி 2019 பொதுத் தேர்தலில் பிஜேபி கட்சியின் வாக்கு வங்கியை பலப்படுத்த வேண்டும் எனத் திட்டமிட்டு மத்திய அரசு ஊழியர்களைக் கவரும் வகையில் புதிய திட்டத்தை வகுத்துள்ளார். ஏற்கனவே 7வது சம்பள கமிஷன் அறிக்கையில் ஏகப்பட்ட சம்பள உயர்வை அளித்துள்ள நிலையிலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இது போதுமானதாக இல்லை என்ற கருத்து வலிமையாக உள்ளது. இதனைத் தகர்த்து இவர்களின் வாக்குகளைப் பிஜேபி கட்சிக்குக் கொண்டு வர மோடி திட்டமிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி 7வது சம்பள கமிஷனில் அறிவிக்கப்பட்ட பரிந்துரைகளைத் தாண்டில் சம்பள உயர்வும், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒய்வு பெறும் வயது 55இல் இருந்து 62ஆக உயர்த்தப் போவதாக அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
சம்பள உயர்வு
ஜனவரி 2016இல் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு 14 சதவீத சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இவர்கள் குறைந்தபட்ச சம்பள அளவில் மாற்றத்தையும், தகுதி அடிப்படையிலான சம்பளத்தையும் அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த 4 வருடத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அறிவித்த சலுகைகள்.
தபால் துறை ஊழியர்கள்
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் இந்திய தபால் துறையில் இருக்கும் கிராமபுற ஊழியர்கள் மற்றும் பகுதிநேர ஊழியர்களுக்கு 56 சதவீத சம்பள உயர்வு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இவர்களுக்கான அரியர் தொகை ஜனவரி 1, 2016 முதல் அளிக்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் பல துறையில் பல காரணங்களுக்காகப் பதிலாயனுப்பப்படுகிறார்கள் (deputation), இவர்களுக்கு அளிக்கப்படும் தொகையை இரட்டிப்புச் செய்து 2,000 ரூபாய் முதல் 45,000 ரூபாய் வரை அளிக்க மோடி அரசு அளித்துள்ளது.
8 லட்சம் ஆசிரியர்கள்
அக்டோபர் 2017இல் 7வது சம்பள கமிஷன் அமலாக்கம் செய்யப்பட்ட நிலையில் UGC மற்றும் UCH உதவி பெறும் கல்லூரியில் பணியாற்றும் சுமார் 8 லட்சம் ஆசிரியர்களுக்கு அதிரடியான சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர்களது சம்பளம் தற்போது 10,400 ரூபாய் முதல் 49,800 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
குறைந்தபட்ச சம்பளம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச சம்பள அளவை 18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் துறையில் தற்போது குறைந்தபட்ச சம்பளம் என்பது 18,000 ரூபாயில் முதல் 21,000 ரூபாயாக வரையில் உள்ளது.
25,000 ஓய்வூதியதாரர்கள்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல்கலைகழங்கள் கல்லூரிகள் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய தொகை தற்போத 25,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…