மத்திய அரசு அளித்தது ரூ.600 கோடி..!மக்கள் அள்ளி தந்தது ரூ.1,027 கோடி..!! கேரள வெள்ள நிதி ரீப்போட் இதோ..!!
கேரளாவில் பெய்த கடுமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அம்மாநிலமே வெள்ளத்தில் முழ்கியது.வெள்ளத்தால் 483 பேர் பலியாகி உள்ளனர்.மக்கள் சுமார் 4.5 லட்சம் பேர் இன்னும் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.கேரளாவில் வெள்ள மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக மக்களும்,பல மாநில அரசுகளும், சினிமா பிரபலங்களும் நிதி உதவி அளித்துள்ளது.
இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்ட பாதிப்பிற்குரூ.2300 கோடி மத்திய அரசிடம் கேட்டார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன்.இந்நிலையில் மத்தியரசு 600 கோடியை முதற்கட்டமாக கேரள வெள்ள நிவாரண நிதியாக அளித்தது.
இதனிடையே கேரளா வெள்ள நிவாரணத்திற்கு மக்கள் மட்டுமே ரூ.1,027 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.இதனை கொண்டு முதற்கட்ட புனரமைப்பு பணிகளை செய்ய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.இந்த தொகை மத்தியரசு அளித்த தொகையை விட மக்கள் அளித்த தொகை அதிகம் எனபது குறிப்பிடத்தக்கது.மத்தியரசு கூடுதல் தொகை அளிக்க மலைத்த நிலையில் மக்கள் அம்மாநிலத்திற்கு மறுக்காமல் இருப்பதை தராளமாக அளித்துள்ளனர்.
கேரளாவிற்கு கடை கோடி குடிமகனும் நிதி அளித்துள்ளது மனித நேயம் மண்ணில் தான் உள்ளது என்பதை அறிய செய்கிறது.
DINASUVADU