மத்திய அரசுடன் மோதல் போக்கை கைவிட்டு, திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கி உதவ வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியிடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவுகிறது. தன்னிடம் உள்ள நிதியை குறைத்துக் கொண்டு மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கூறி வருகிறது.
இதையடுத்து சமீபத்தில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் கூட்டத்தில், இதுகுறித்து பரிசீலிக்க குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசுடன் மோதல் போக்கை கைவிட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கேட்டுக் கொண்டுள்ளார். டெல்லியில் பேட்டி அளித்த அவர், தன்னிடம் எவ்வளவு நிதியை வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து ரிசர்வ் வங்கி நிர்ணயிக்க வேண்டிய தருணம் இது என்று கூறியுள்ளார்.தன்னிடம் வைத்துள்ள நிதியின் ஒருபகுதியை மத்திய அரசுக்கு ஒதுக்கி, நாட்டின் வறுமையை ஒழிக்க ரிசர்வ் வங்கி உதவ வேண்டும் என்றும் அருண் ஜெட்லி வலியுறுத்தியுள்ளார்.
dinasuvadu.com
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…