மத்திய அரசுக்கு எதிராக போராட கட்சிகளுக்கு கர்நாடக முதலமைச்சர் சீதாராமையா அழைப்பு!
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகையைப் பின்பற்றுவது குறித்த மத்திய அரசு பரிந்துரைக்கு எதிராக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஒன்றுபட்டு போராட அழைப்பு விடுத்துள்ளார்.
மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டங்களை முறையாக செயல்படுத்தும் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்துவிடும் என்பதால் 1971 மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி வரையறையும், நிதிப்பகிர்வும் கடைபிடிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகையை பின்பற்றுமாறு 15-வது மத்திய நிதிக்குக்குழுவுக்கு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதாக தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள சித்தராமையா இதன் காரணமாக தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக போராட இணையுமாறு கேட்டுக்கொண்டுள்ள அவர், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர்களையும், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சஷிதாரூரையும் ட்விட்டரில் டேக் செய்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.