Categories: இந்தியா

அருண்ஜெட்லி -விஜய் மல்லையா சந்திப்பு உண்மை…!விஜய் மல்லையா வெளிநாடு தப்பி செல்ல லுக் அவுட் நோட்டீஸ் அதிரடியாக நீக்கப்பட்டது …!உண்மையை உடைத்த பாஜக மூத்த தலைவர்

Published by
Venu

விஜய் மல்லையாவை 2014 முதல் சந்திக்கவில்லை என ஜெட்லி கூறிய கருத்துக்கு பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி விட்டு அதை திரும்பச் செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையா, லண்டன் தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தக் கோரி இந்திய அரசு தொடர்ந்த வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Image result for vijay mallya arun jaitley

இந்நிலையில் நேற்று லண்டன் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, கடனை திரும்பச் செலுத்த தாம் தயாராக இருந்த போதும் வங்கிகள் அதை ஏற்றுக் கொள்ளாமல், தமது கடன் தீர்வு விண்ணப்பத்திற்கு நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவித்ததாகவும் கூறினார்.

மேலும்  நாட்டை விட்டு வெளியே செல்லும் முன்பு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து நிலைமையை சரி செய்ய முயற்சித்தேன் – விஜய் மல்லையா என்று விஜய் மல்லையா பரபரப்பு தகவல் தெரிவித்தார்.

இதற்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில்,  2014 ஆண்டு முதல் தற்போது வரை என்னை சந்திக்க விஜய் மல்லையாவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை  என்று கூறினார்.

இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி இருவரின் சந்திப்பு குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் பதிவிட்ட பதிவில்,மல்லையா தப்பிய விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள் உள்ளன. முதலாவது விவகாரம் என்னவெனில், மல்லையா 54 பைகளுடன் வெளியேறுவதற்கு வசதியாக அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டு இருந்த  லுக் அவுட் நோட்டீஸ் 2014, அக்டோபர் 25 ஆம் தேதி நீர்த்துப்போகச்செய்யப்பட்டது. இரண்டாவது விவகாரம் என்னவெனில்,லண்டன் செல்லும் முன் நாடாளுமன்றத்தின் சென்ட்ரல் ஹாலில் மல்லையாவை அருண்ஜெட்லி சந்தித்தார். இவரது இந்த பதிவு  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

2 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

10 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

22 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago