மத்தியப் பிரதேசத்தில் போலீசை அறையில் வைத்துப் பூட்டி விட்டு கொள்ளை!

Default Image

காவல்துறை கண்காணிப்பாளரையே  மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அறையில் வைத்துப் பூட்டி விட்டு அவரது வீட்டில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நள்ளிரவில் துணிச்சலாக  எஸ்.பி. சுனில் ரஜோர் அறைக்குள்ளேயே நுழைந்த கொள்ளையர்கள் அவரது டெபிட் கார்டுகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்ததுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் அவரது அறையை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு வீடுமுழுவதும் சுமார் ஒருமணிநேரம் விலையுயர்ந்த பொருட்களை தேடி சுற்றிவந்ததாகவும் ஆனால் அவர்களுக்கு ஏதும் சிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.  இறுதியில் எஸ்.பி.யின் செல்போன் தகவலின் பேரில் வந்த காவல்துறையினர் ஒரு கொள்ளையனை கைது செய்த நிலையில் மேலும் 3 பேர் தப்பியோடிவிட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்