மத்தியப்பிரதேச முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமல்நாத், கடந்து வந்த பாதையை காணலாம்.
உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் 1946ஆம் ஆண்டு பிறந்தவர் கமல்நாத்.
1980 ஆம் ஆண்டு முதன் முதலில் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மக்களவைத் தொகுதியில் இருந்து 9 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புக்கு உரியவர். இவரது சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை.
1991ஆம் ஆண்டில் இருந்து பலமுறை மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். 2001 முதல் 2004 வரை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். காந்தி குடும்பம், நேரு குடும்பம் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புடையவர். இந்திரா காந்தியின் மூத்த மகன் சஞ்சய் காந்தியின் பள்ளிக்கால நண்பராக இருந்தவர்.
மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கடந்த மே மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இந்தத் தேர்தலுக்காக கடுமையான உழைப்பை வெளிப்படுத்தினார். அதன் வெளிப்பாடாக தற்போது மத்தியப்பிரதேச முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…