மது விலக்கால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை உயர்வு..!
பீகாரில் மது விலக்கு அமலுக்கு வந்ததை தொடர்ந்து மதுவுக்கு செலவாகும் பணத்தில் துணிகள், உணவுப் பொருட்கள் வாங்குவது அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆசிய மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமானது ((Asian Development Research Institute)) பீகாரில் மதுவிலக்கு அமலான 6 மாத காலத்தில் அதிகம் விற்பனையான பொருட்கள், குற்றச்செயல்கள், பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டது. ஆய்வில் குற்றம் பெருமளவு குறைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
விலை உயர்ந்த சேலைகள் விற்பனை வீதம் ஆயிரத்து 700 விழுக்காடும், தேன் விற்பனை 380 விழுக்காடும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 சதவீதம் பேர் புதிய சொத்துகள் வாங்கி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மரச்சாமான்கள், தேன், பால் பொருட்கள் விற்பனையும் உயர்ந்திருப்பதாக விற்பனை வரி மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.