குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ளது குதார்தி கிராமம். இந்த கிராமத்தின் வழியாக பாயும் கோமா ஆற்றை ஒட்டி உள்ள பண்ணையில் நீர்த்தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வேலியின் அருகே சிலர் நேற்று மண் வெட்டி வாகனங்களில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது வேலியில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த விரிசல் மேலும் விரிவடைந்து தொழிலாளர்கள் மீது மண் சரிந்து விழுந்தது.
இந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே அவர்கள் இறந்துவிட்டனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பண்ணையில் இருந்து சட்டவிரோதமாக மண் அள்ளியபோது விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவது குறித்து ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பஞ்சாயத்து தலைவர் தெரிவித்துள்ளார்.
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…