மக்கள் கொடுத்தது 1027 கோடி..!!
திருவனந்தபுரம்: கேரளா வெள்ள நிவாரணத்திற்கு மக்கள் மட்டுமே ரூ.1,027 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் வெள்ளத்தால் 483 பேர் பலியாகி உள்ளனர்.அங்கு இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளைப் போல முகாம்களில் இருக்கின்றனர். இதுவரை கேரளாவிற்கு ஏற்பட்ட சேதம் 20,000 கோடிக்கும் மேல் ஆனால் மத்திய அரசு இதுவரை 600 கோடி ரூபாய் கொடுத்துள்ளது.ஆனாலும் கேரளாவில் மொத்தமாக இயல்புநிலை திரும்ப முதல் கட்டமாக குறைந்தது 2500 கோடி ரூபாயாவது தேவைப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் கேரளா வெள்ள நிவாரணத்திற்கு மக்கள் மட்டுமே ரூ.1,027 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு மக்கள் கொடுத்த பணம் மட்டுமே இதுவரை ரூ.1,027 கோடி வந்துள்ளது என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இதை வைத்து முதற்கட்ட புனரமைப்பு பணிகளை செய்ய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
DINASUVADU