கேரளா :
கேரளாவை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த கன மழை கேரளாவை தும்சம் செய்தது.கிட்டத்தட்ட இலட்சக்கணக்கனான மக்கள் வீடுகளை இழந்து அரசு முகம்களில் தங்க வைக்கப்பட்டனர்.கன மழையால் கேரளாவில் 483 பேர் இறந்துள்ளனர்.மக்களுக்கு தேவையான ஏராளமான உதவி பணமாகவும் , பொருட்களாகவும் அண்டை மாநிலத்தில் இருந்து கேரளா மக்களுக்கு வழங்கப்பட்டது.
தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் இயல்பு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகின்றது.குறிப்பாக வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணியில் அம்மாநில அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.இம்மழையில் ஏற்பட்ட பாதிப்புகளை மறுசீரமைக்கவும் , வீடு உடமைகளை இழந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அம்மாநில அரசுக்கு 20,000 கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கேரள அரசாங்கமும் மத்திய அரசிடம் முதல்கட்டமாக 2000 கோடி கேட்டது.ஆனால் மத்திய அரசாங்கம் 600 கோடி மட்டும் வழங்கியது.அண்டை நாடான அரபு நாடு 700 கோடி கொடுக்க முன் வந்த போது இந்திய நாட்டிற்கு நிவாரணம் அண்டை நாடுகளில் இருந்து பெறுவதில்லை என அரபு நாடு கொடுத்த பணத்தை மத்திய அரசாங்கம் வாங்க மறுத்தது.இது கேரள மக்களுக்கு மட்டுமில்லாமல் இந்திய முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு வித்தியாசமன முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.அதில் குறிப்பாக கேரளா மாநில அமைச்சர்கள் கேரளாவை மீட்டெடுக்க உலகம் முழுவதும் வாழும் கேரளா மக்களை சந்தித்து நிதி பெற உள்ளனர்.அந்த வகையில் கேரள மணிலா அமைச்சர்கள் மக்களின் வாழ்வுக்காக நிதி திரடட உலகம் முழுவதும் பயணம் செய்ய உள்ளனர்.
இதற்காக இந்தியாவில் மற்றும் பல்வேறு நாடுகளில் இருக்கும் மலையாளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளிடம் பேசி வருகின்றனர்.அது மட்டும் இல்லாமல் மலையாளிகள் அதிகமாக வாழும் நாடுகளின் ஐக்கிய அரபு நாடுகள் , ஓமன் , பக்ரைன் , சவுதி அரேபியா , குவைத் , கத்தார் , சிங்கபூர் , மலேசியா , ஆஸ்திரேலியா ,நியூஸிலாந்து , இங்கிலாந்து , ஜெர்மனி , அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கு கேரள அமைச்சர்கள் செல்லவுள்ளனர்..
மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க ஒரு மாநில அமைச்சர்கள் 14 நாடுகள் வரை சென்று நிதி திரட்டும் இந்த முடிவு அனைத்து மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது..
DINASUVADU
கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார் வைப்பது எதற்காக என்றும் இந்த…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பிஎஸ்எல்வி சி-60 (PSLV-C60/SPADEX ) ராக்கெட் எப்போது எந்த தேதியில்…
டெல்லி : மாணவர்கள் கல்வி இடைநிற்றலை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கல்வி உரிமை சட்டம் (RTE) 2019-ஐ அமல்படுத்தி…
சென்னை : நல்ல படங்கள் வெளியானால் மக்கள் கொண்டாடுவார்கள் என்கிற அளவுக்கு விடுதலை 2 படத்தினை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். முன்பை…
ராஜஸ்தான் : கடந்த 2016, 2020 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன்…
சென்னை :அசத்தலான சுவையில் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் கல்கல் ரெசிபி செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ரவை -50…