மக்களவை தேர்தல்! வேட்பாளர்களை அறிவித்த மம்தா பானர்ஜி… கடும் அதிருப்தியில் காங்கிரஸ் கட்சி

Mamata Banerjee: மக்களவை தேர்தலில் போட்டியிடும் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமுள்ள 42 தொகுதிகளுக்கான பட்டியலையும் அக்கட்சியின் தலைவரும், மாநிலத்தின் முதல்வருமான மம்தா பேனர்ஜி வெளியிட்டுள்ளார், கட்சியின் பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை அவர் அறிமுகப்படுத்தினார்.

Read More: நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

அதன்படி முதல்வரின் உறவினரான அபிஷேக் பானர்ஜி டயமண்ட் துறைமுகம் தொகுதியில் போட்டியிடுகிறார். பெர்ஹாம்பூர் தொகுதியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார். அதே போல மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட மஹுவா மொய்த்ராவுக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Read More – உலக அழகிப்போட்டியில் மகுடம் சூடினார் கிறிஸ்டினா பிஸ்கோவா! எந்த நாட்டை சேர்ந்தவர் தெரியுமா?

’இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்ற போதும் தன்னிச்சையாக வேட்பாளர்களை திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது, காங்கிரஸ் கட்சியை அதிருப்தியடைய செய்துள்ளது. இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸுக்கு, காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய தேசிய காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸுடன் மரியாதைக்குரிய வகையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக பலமுறை தெரிவித்திருக்கிறது.

Read More – இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமா! தேர்தல் நெருங்கும் நேரத்தில் முடிவு

அத்தகைய ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் மூலமே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட வேண்டும், ஒருதலைப்பட்சமான அறிவிப்புகளால் அல்ல..! ’இந்தியா’ கூட்டணி ஒன்றாக இணைந்து பாஜகவை எதிர்த்து போராட வேண்டும் என்று தான் காங்கிரஸ் எப்போதும் விரும்புகிறது” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்