மகாராஷ்ட்ரா மாநிலம் புனே நகரில் வசிப்போரின் எண்ணிக்கையை விட வாகனங்களின் எண்ணிக்கை அதிகம்…!
வாகனங்களின் எண்ணிக்கை மகாராஷ்ட்ரா மாநிலம் புனே நகரில் வசிப்போரின் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது. அங்கு தற்போது வசிப்போரின் எண்ணிக்கை 35 லட்சமாக உள்ள நிலையில், வாகனங்களின் எண்ணிக்கை 36 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இதில் கார்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்து 45 ஆயிரம், இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 27 லட்சத்து மூன்றாயிரம். வாடகை கார்களின் எண்ணிக்கையும் 28 ஆயிரத்து 344 ஆக அதிகரித்து உள்ளது என்று புனே நகர வட்டார போக்குவரத்து தலைமை அதிகாரி பாபாசேகன் அஜ்ரி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.