மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 12 வயதில் சிகை அலங்காரத்தில் அசத்தும் சிறுமி…!
12 வயது சிறுமியின் சிகை அலங்கார கலை மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பாராட்டுக்கு உரியதாக மாறி உள்ளது.
அந்த மாநிலத்தின் புனேவில் வசித்து வரும் ஜூகி சந்தோஷ் சாப்கி 8 வயது முதலே தாயாரிடம் இருந்தும், சிகை அலங்கார கடை வைத்துள்ள தந்தையிடம் இருந்தும் அந்தக் கலையை கற்று வந்தார். இப்போது அவரிடம் தலையை கொடுத்து அலங்காரம் செய்து கொள்ள மகளிர் கூட்டம் காத்துகிடக்கிறது. பிஞ்சு கரங்களால் சாப்கி செய்யும் அலங்காரத்தை கண்டு அசந்து போன இந்திய சிகை அலங்கார கலைஞர்கள் அமைப்பு லிம்கா சாதனை புத்தகத்தில் சாப்கியின் பெயரும் இடம் பெற நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.