மகாராஷ்ட்ரா அரசு சாதனை..!சுமார் 3 லட்சம் எலிகள் கொன்று குவிப்பு….!பாஜக முன்னாள் அமைச்சர் ஏக்நாத் சட்டசபையில் பெருமிதம் …….

Default Image

மகாராஷ்ட்ரா   மாநில அரசு , சட்டப்பேரவை வளாகத்தில் இருந்த சுமார் 3 லட்சம் எலிகள் ஏழு நாட்களில் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதற்காக தனியார் நிறுவனத்திற்கு செலவழித்ததை விட பத்து இருபது பூனைகளை விட்டிருக்கலாம் என பாஜக வின் முன்னாள் அமைச்சர் ஏக்நாத் காட்சே சட்டசபையில் கூறிய போது பெரும் சிரிப்பலை ஏற்பட்டது. மகாராஷ்ட்ரா தலைமைச் செயலகமான மந்த்ராலாயாவில் எலித்தொல்லையை கட்டுப்படுத்த, தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அந்நிறுவனம் ஒரு வாரத்தில் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் எலிகளைக் கொன்றதாக அறிக்கை அளித்துள்ளது. ஒருவாரத்தில் இத்தனை எலிகளை எப்படிக் கொல்ல முடியும் என்று ஏக்நாத் சந்தேகம் எழுப்பினார். அப்படியானால் ஒரு நாளில் 45 ஆயிரம் எலிகளைக் கொல்ல வேண்டும். மும்பை நகரில் சுமார் 6 லட்சம் எலிகளைக் கொல்வதற்கு மாநகராட்சி இரண்டு ஆண்டுகள் எடுத்தது என்பதையும் ஏக்நாத் காட்சே சுட்டிக்காட்டினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்