மகாராஷ்டிரா: ரயில் விபத்தில் 6 பேர் பலி? தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது ரயில் மோதிய பரிதாபம்.!

மகாராஷ்டிராவில் புஷ்பக் ரயில் பயணிகள் மீது கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

Pushpak Express - Jalgaon

ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில்  நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, இன்று மாலை 5 மணியளவில் ரயிலில் தீ விபத்து என பரவிய தகவலால் புஷ்பக் ரயிலில்  இருந்தவர்கள் அபாயச் சங்கிலியை இழுத்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது கீழே இறங்கி தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது, எதிரே வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, விபத்து குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால், இந்த பயங்கர ரயில் விபத்தில் எத்தனை பயணிகள் இறந்தனர் என்பது குறித்த முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்