மகாத்மா காந்தி எழுதிய அஞ்சல் அட்டை ரூ.13.5 லட்சத்துக்கு ஏலம்..!
தேசத்தந்தை மகாத்மா காந்தி கடந்த 1924ஆம் ஆண்டு கைப்பட எழுதிய அஞ்சல் அட்டை ஒன்று, அமெரிக்காவில் பதிமூன்றரை லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
விடுதலை போராட்டத்தின்போது, பெண்களின் உரிமைக்காக போராடி வந்த அன்னி பெசண்ட் அம்மையாருக்கு, 1924ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி, தமது மகன் தேவதாஸ் காந்தியின் பயண விவரம் தொடர்பாக அஞ்சல் அட்டை ஒன்றை மகாத்மா காந்தி எழுதியிருந்தார்.
இந்த அஞ்சல் அட்டை அமெரிக்காவில் ஆன்லைன் மூலமாக ஏலத்தில் விடப்பட்டிருந்தது. கடந்த 13ஆம் தேதியோடு, ஏல நடவடிக்கைகள் முடிந்த நிலையில், அந்த அஞ்சலட்டை இந்திய மதிப்பில் பதிமூன்றரை லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.