சபரிமலை கோவில் நடை அடைப்பு..!மீண்டும் திறக்கப்படுகிறது..இந்நாளில்
- சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மூடப்பட்டது.
- மாசி மாத பூஜைக்காக மீண்டும் நடை பிப்.,13 திறக்கப்படுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவில் ஆனது மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30ம்தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் டிச15 தேதி மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.இதில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் திரண்டு மகர ஜோதியை கண்டு தரிசனம் செய்தனர்.இந்நிலையில் 20ந் தேதி பக்தர்கள் தரிசனம் செய்தார்கள் அதன் பின் அரிவராசனம் பாடப்பட்டு சரியாக இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது.
21ந் தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. நேற்று பந்தளம் ராஜகுடும்ப பிரதிநிதி மட்டும் சுவாமி சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்.அவ்வாறு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி காலை 6 மணிக்கு சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து சபரிமலை கோவில் நடை பூட்டப்பட்டு சாவி மற்றும் திருவபாரணங்கள் அடங்கிய பெட்டியானது முறைப்படி பந்தளம் ராஜகுடும்ப பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்படும் அதன்படி ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில் சபரிமலைசுவாமி ஐயப்பன் கோவில் நடையானது மீண்டும் மாசி மாத பூஜைக்காக அடுத்த மாதம் பிப்ரவரி 13ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.