மகர ஜோதிக்கு ஹெலிகாப்பரில் இளம் பெண்களை சபரிமலையில் தரையிறக்க கேரள அரசு திட்டம்..!!

Default Image

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மகர ஜோதிக்கு வருகை தரும் இளம்பெண்களை பாதுகாப்புடன் சபரிமலைக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்ல கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

Image result for மகர ஜோதி ஐயப்பன்

கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நடைமுறை பழங்கால பாரம்பாரியமாக கருதப்பட்டு வந்த நிலையில் உச்சநீதிமன்றம் அனைத்து வகையான பெண்களும் கோவிலுக்குள் செல்லாம் அவர்களை அனுமதிக்க உத்தரவிட்டது.இதனை தொடர்ந்து பெண்கள் சபரிமலை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர்.அவர்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்தும்,காலில் விழுந்து கோரிக்கையிட்டும் வலியுறுத்திய நிலையில் அங்கு வந்த பெண்கள் சிலர் அங்கிருந்து பக்தர்களின் மனதை நோகடிக்க கூடாது என்று கலைந்து சென்றனர்.பின் 3 பெண்கள் ஐயப்ப சன்னிதி வரை சென்றும் பக்தர்களின் எதிர்ப்பால் தேவஸ்தானம் அவர்களை உடனே வெளியோருமாறு உத்தரவிட்டது.இது அங்கு எந்த வித அசாம்பவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்ட நிலையிலும் போராட்டம் வலுபெற்றது.கேரள அரசு இந்த விவகாரத்தில் தேவஸ்தானம் முடிவு எடுத்து கொள்ளட்டும் என்று அவர்கள் முடிவிற்கே விட்டுவிட்டது.இந்நிலையில் அங்கு சர்ச்சைகளும்,எதிர்ப்புகளும் வலுப்பெற்று வரும் நிலையில் 10 முதல் 50 வயது கொண்ட 550க்கும் மேற்ப்பட்ட பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.

Image result for helicopter india

சமீபத்தில் தான் சபரிமலை மாதாந்திர பூஜைக்காக  திறக்கப்பட்டது அப்போது சாமி தரிசனத்துக்கு வந்த 50 வயதுக்குட்பட்ட பெண்களை போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எத்தனை போரட்டம் நடந்தாலும் சரி நாங்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தியே  தீருவோம் என்று முழு முயற்சியில் இறங்கி இருக்கும் கேரள அரசு சபரிமலை  மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தொடங்க உள்ள நிலையில் இந்த தரிசனம் செய்வதற்காக இதுவரை ஆன்லைன் மூலம் சுமார் 3.50 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த முன்பதிவில்  550க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

Related image

ஆன்லைன் மூலமாக அடுத்த அதிர்வு நிகழ உள்ளது சபரிமலையில் இந்த முன்பதிவு செய்துள்ள பெண்களை மிக பாதுகாப்புடன் சபரிமலை கோயிலுக்கு அழைத்துச் செல்ல கேரள அரசு கண்ணும் கருத்துமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன் முன்னோட்டம் தான்  ஹெலிகாப்டர் வசதியை பயன்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஹெலிகாப்டரில் அந்த பெண்களை பத்திரமாக சபரிமலைக்குள் தரையிறக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.இந்த மூலம் அவர்கள் எந்த இடையூறுமின்றி சுவாமி சன்னிதானம் வரை சென்று வழிபட இயலும்.இதனால் இந்த ஹெலிகாப்டர் மத்திய பாதுகாப்புத்துறையிடம் பெற்று அதன் மூலம் பெண்களை அழைத்துச் செல்லபட உள்ளனர்.

Related image

இந்த சபரிமலை ஹெலிகாப்டர் பயணமானது திருவனந்தபுரம் அல்லது கொச்சியில் இருந்து இந்த ஹெலிகாப்டர் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இதனால் பெண்களை போராட்டக்காரர்கள் தடுக்க வாய்ப்பில்லை. அவர்களை முழு பாதுகாப்புடன் அவர்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்ல முடியும். இந்த ஹெலிகாப்டர் சேவையை ந்டைமுறைப்படுத்த வேண்டுமென்றால் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சபரிமலை ஹெலிகாப்டர் சேவை மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் மட்டுமே இந்த திட்டத்தை கேரள அரசால் செயல்படுத்த முடியும்.கேரள இந்த ஒப்புதலுக்கு காத்துகொண்டிருப்பதாக ஹெலிகாப்டர் வட்டார தகவல்கள் தரையிறங்குகின்றன.

Related image

DINASUVADU,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்