Categories: இந்தியா

ப.சிதம்பரம் குடும்ப வழக்கு இன்று விசாரணை..!

Published by
Dinasuvadu desk
இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் சொத்துகள் வாங்கியது தொடர்பாகவும், அமெரிக்காவில் உள்ள இரு நிறுவனங்களில் முதலீடு செய்தது தொடர்பாகவும் வருவாய் ஆதாரங்கள் மற்றும் வங்கி கணக்குகள் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்யவேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோருக்கு 2 முறை வருமான வரித்துறை நோட்டீசு அனுப்பியது.
இந்த நோட்டீசுகளை ரத்துசெய்யக்கோரியும், இதுதொடர்பாக கருப்பு பண ஒழிப்பு சட்டத்தின் கீழ் தங்களுக்கு எதிராக பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர தடை விதிக்கக்கோரியும் நளினி சிதம்பரம் உள்ளிட்ட 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி  மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்து அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கறுப்பு பண ஒழிப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரின் மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது வருமான வரித்துறை.வெளிநாட்டு வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை மறைத்து வைத்ததாக வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளது. அதன்படி, ப.சிதம்பரம், அவரின் மனைவி நளினி, மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஜூலை  மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது . அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
Published by
Dinasuvadu desk

Recent Posts

சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…

1 min ago

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…

37 mins ago

திருக்கார்த்திகை 2024- திருவண்ணாமலை திருக்கார்த்திகை எப்போது?.

திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…

47 mins ago

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…

2 hours ago

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…

2 hours ago

கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி?. எளிமையான செய்முறை விளக்கங்கள்..

சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…

3 hours ago