ப்ரான்ஸ் – இந்தியா : நட்புறவு மேலும் வலுப்பெற்று உள்ளது : சுஷ்மா ஸ்வராஜ்..!
ப்ரான்ஸ் – இந்தியா இருநாடுகளின் நட்புறவு மேலும் வலுப்பெற்று உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
ப்ரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் வஸ் லி ட்ரையன் (Jean-Yves Le Drian) -ஐச் சந்தித்த பின்னர் பாரிஸ் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த சுஷ்மா ஸ்வராஜ் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் இருநாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைக்க உறுதி பூண்டிருப்பதாக தெரிவித்தார்.