மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக (ஏஎஸ்ஐ) பணிபுரிபவர் அம்ரித் பால் பைலாலா. இவர் நிஷாத்புரா பகுதியில் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் வேகமாக வந்த காரை அம்ரித் மறித்தார். ஆனால் நிறுத்துவதற்குப் பதிலாக அந்தக் கார் அம்ரித் மீது மோதியது.
இதில் கீழே விழுந்த அம்ரித் மீது, டிரைவர் காரை ஏற்றிக் கொல்ல பார்த்துள்ளார். ஆனால் காரின் அடிப்பகுதியில் சிக்கிய அம்ரித்தை அந்தக் கார் 500 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றது. பின்னர் காரின் அடிப்பகுதியில் இருந்து அம்ரித் தரையில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அம்ரித்தை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. – ஐஏஎன்எஸ்
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…