Categories: இந்தியா

போலி ஏ.டி.எம். கார்டு மோசடி : வீடியோவால் போலீசார் அதிர்ச்சி..!

Published by
Dinasuvadu desk

புதுவையில் போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து கோடிக்கணக்கில் பணமோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் என்ஜினீயர் பாலாஜி, டாக்டர் விவேக் ஆனந்த் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியாக முத்தியால்பேட்டை சோலைநகரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சந்துருஜி சேர்க்கப்பட்டுள்ளார். அவரது தம்பி மணிசந்தர் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். அவர் போலி ஏ.டி.எம். கார்டு மோசடி தொடர்பாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகவும் போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் மும்பையில் சந்துருஜி தங்கி இருப்பதாகவும், அவரை போலீசார் சுற்றி வளைத்ததாகவும் நேற்று முன்தினம் தகவல்கள் பரவின. ஆனால் இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தநிலையில் சந்துருஜி பேசும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த காட்சியை சந்துருஜி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், போலி ஏ.டி.எம். கார்டு மோசடியில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். சந்துருஜியை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் அவரது வீடியோ காட்சிகள் வெளியான சம்பவம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

50 நாட்களுக்கு மேலாக போலீசாருக்கு போக்குகாட்டி வரும் சந்துருஜியை கைது செய்யாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் போலீசாருக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் நடவடிக்கை தொடர்பாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்த வழக்கினை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாக தெரிகிறது. அதில் ஒரு தரப்பினர் தவறான தகவல்களை பரப்பி வருவதாக உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தவறான தகவல்களை பரப்பும் போலீசார் யார்? என்பது குறித்து ரகசியமாக விசாரணை நடந்து வருகிறது.

Recent Posts

“அஜித் சாருடன் இணைவது விரைவில் நடக்கும்”..லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!

“அஜித் சாருடன் இணைவது விரைவில் நடக்கும்”..லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!

சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…

16 minutes ago

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று…

35 minutes ago

திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர்…

38 minutes ago

திருப்பதி கூட்ட நெரிசல்: தமிழகத்தை சேர்ந்த ஒருவர்… உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியீடு.!

ஆந்திரப் பிரதேசம்:  ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…

60 minutes ago

பொங்கல் பரிசுத் தொகுப்பு : திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு  (9ஆம்…

2 hours ago

Live : சட்டபேரைவை கூட்டத்தொடர் முதல்..திருப்பதி கூட்ட நெரிசல் வரை!

சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…

2 hours ago