போலி ஆவணத்தை காட்டி கடன்பெற்ற விஜய் மல்லையா..!

Default Image

கிங்ஃபிஷர் ஏர்லைன்சை மீட்டெடுப்பதற்காக எனக்கூறி, வங்கிகளிடம் போலி ஆவணங்களை பயன்படுத்தி கடன்பெற்ற விஜய் மல்லையா, அந்த பணத்தை தனது சொந்த செலவுகளுக்காக பயன்படுத்தியிருப்பதாக, அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

யுபி ஹோல்டிங்ஸ் மற்றும் முடங்கிப்போன கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனங்களின் தலைவரான விஜய் மல்லையா மீது அமலாக்கத் துறை 2வது குற்றப்பத்திரிக்கையைச் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. வங்கிகளிடம் மல்லையா பெற்ற 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் கடனை ஃபோர்ஸ் இந்தியா ஃப்ர்முலா ஒன் (Force India Formula One )விளையாட்டு அணிக்கும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஐபிஎல் அணிக்கும், தனது சொந்த காரணங்களுக்காகவும் மல்லையா பயன்படுத்தியுள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.

கடந்த மே மாதம் 15ஆம் தேதியுடன் எஸ்பிஐ வங்கியிடம் வாங்கிய கடன் மற்றும் வட்டியுடன் சேர்த்து அவர் செலுத்த வேண்டிய தொகை 9 ஆயிரத்து 990 கோடி ரூபாயாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எஸ்பிஐ உள்ளிட்ட 17 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம், கடனை பெறுவதற்காக, தனக்குத் தெரிந்தே, போலி ஆவணங்களை பிணையாக வைத்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்