“எந்தவொரு வேலை விளம்பரத்தையும் பொறுத்தவரை, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும்” என்று இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) தெரிவித்துள்ளது.
போலியான வேலை விளம்பரங்களுக்கு இரையாக வேண்டாம் என்றும் ஏதேனும் சுற்றறிக்கைகள் அல்லது காலியிடங்களைக் கையாளும் போது கவனமாக இருக்கவும், மோசடிகளைத் தவிர்க்க இந்திய விமான நிலைய ஆணையம் இணையதளத்தில் தொடர்ந்து சரிபார்க்கவும் என்றும் ஏஏஐ தெரிவித்துள்ளது.
ஏஏஐ ஆனது 156 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு நடத்தி வருகிறது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் aai.aero மூலம் விரும்பிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 ஆகும்.
காலியிடங்கள்:
ஜூனியர் அசிஸ்டெண்ட் (தீயணைப்பு சேவை) NE-4: 132 பதவிகள்
இளநிலை உதவியாளர் (அலுவலகம்) NE-4: 10 பதவிகள்
மூத்த உதவியாளர் (கணக்குகள்) NE-6: 13 பதவிகள்
மூத்த உதவியாளர் (அதிகாரப்பூர்வ மொழி) NE-6: 1 பதவி
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். விரிவான தகுதி அளவுகோல்களுக்கு, விண்ணப்பதாரர்கள் ஏஏஐ இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்[நவம்பர் 16]மீனாவின் புதிய பிசினஸ் ஐடியா.. சப்போர்ட் செய்யும் ஸ்ருதி.. மீனாவின் புதிய…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் என்ன பிரச்சினை என ஒன்னும் தெரியாமல் திடீரென அறிக்கை…
இலங்கை : இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி…
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…