போலியான வேலை விளம்பரங்களுக்கு இரையாக வேண்டாம் என்று இந்திய விமான நிலைய ஆணையம் எச்சரிக்கை!!

Default Image

“எந்தவொரு வேலை விளம்பரத்தையும் பொறுத்தவரை, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும்” என்று இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) தெரிவித்துள்ளது.

போலியான வேலை விளம்பரங்களுக்கு இரையாக வேண்டாம் என்றும் ஏதேனும் சுற்றறிக்கைகள் அல்லது காலியிடங்களைக் கையாளும் போது கவனமாக இருக்கவும், மோசடிகளைத் தவிர்க்க இந்திய விமான நிலைய ஆணையம் இணையதளத்தில் தொடர்ந்து சரிபார்க்கவும் என்றும் ஏஏஐ தெரிவித்துள்ளது.

ஏஏஐ ஆனது 156 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு நடத்தி வருகிறது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் aai.aero மூலம் விரும்பிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 ஆகும்.

காலியிடங்கள்:

ஜூனியர் அசிஸ்டெண்ட் (தீயணைப்பு சேவை) NE-4: 132 பதவிகள்

இளநிலை உதவியாளர் (அலுவலகம்) NE-4: 10 பதவிகள்

மூத்த உதவியாளர் (கணக்குகள்) NE-6: 13 பதவிகள்

மூத்த உதவியாளர் (அதிகாரப்பூர்வ மொழி) NE-6: 1 பதவி

பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். விரிவான தகுதி அளவுகோல்களுக்கு, விண்ணப்பதாரர்கள் ஏஏஐ இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்