போராடியது எங்கள் உரிமைக்காக சலுகைக்காக அல்ல..! இலவச ரயில் டிக்கெட் வேண்டாம் என்று கூறி சொந்த பணத்தில் ஊர் திரும்பினார்கள்…!!
பயிர்க் கடன் தள்ளுபடி, மானியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்கள் அகில விவசாயிகள் சங்கம் சார்பில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆசிக் முதல் மும்பை வரையிலான 200 கிமீ பேரணியாக சென்றனர்.
இந்நிலையில் ஆளும் பிஜேபி அரசுடன் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளின் பேச்சு வார்த்தை நடைபெற்றது.பின்னர் விவசாயிகளின் அத்தனை கோரிக்கைகளையும் பிஜேபி அரசு ஏற்றுகொண்டது. பின்னர் விவசாயிகள் அனைவர்க்கும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மாநிலஅரசின் சார்பில் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
180 கி.மீ. தூரம் நடக்க தெரிந்த எங்களுக்கு திரும்பவும் பணம் கொடுத்து ரயிலில் பயணிக்க தெரியும். சிறப்பு இலவச ரயில் வேண்டாம். ரயில் கட்டணத்தை திரும்ப செலுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறிய விவசாய தோழர்களின் பதில் மட்டும் அல்ல… அதுவே கேலாகாதுகளாய் செவி மடுத்து உறக்கத்தின் உச்சியில் இருந்த பா.ஜ.க. அரசுக்கு அவர்கள் கொடுத்த சவுக்கடி கொடுத்துள்ளார்கள்.