பொதுச்சொத்துக்களை சொதப்படுத்திய போராட்டக்காரர்கள் மீது ஏன் துப்பாக்கி சூடு நடத்த வில்லை என்று மேற்கு வங்க மாநிலத்தில் நாடியா மாவட்டத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் திலீப் கோஷ் பேசியுள்ளார். இது குறித்து பேசுகையில் கடந்த டிசம்பர் மாதம் ரயில்வே சொத்துகள் மற்றும் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்திய நபர்கள் மீது ஏன்.? மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை போராட்டக்காரர்கள் மீது தடியடியும் நடத்தப் படவில்லை இதனால் பொதுச்சொத்துக்கள் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டன. சேதமடைந்த பொருட்களின் சொத்துக்கள் எல்லாம் யாருடைய பணம் ? அவைகள் என்னுடைய பணம். ஏன்.?அது உங்களுடைய பணம்.போராட்டத்தில் ஈடுபட்டோர் ரயில்களில் தீ வைத்து உள்ளனர். இதுவரை ஒரு தடியடியோ அல்லது ஒரு முதல்தகவல் அறிக்கையோ கூட பதிவு செய்ய வில்லை.இது தொடர்பாக காவல்துறை ஒருவரைக் கூட இதுவரை கைது செய்ய வில்லை பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்தியவர்கள் அது அவர்களுடைய அப்பாவின் சொத்து என நினைத்துக் கொண்டார்களா.? வரி செலுத்துபவர்களின் பணத்தில் உருவாக்கப்பட்ட அரசின் சொத்துகளை எல்லாம் எப்படி அவர்கள் சேதப்படுத்த முடியும்.
அசாம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் எங்களுடைய அரசு நாய்களைச் சுட்டுக் கொல்வதைப் போல போராடியவர்களைச் சுட்டுக் கொன்ற படி இங்கும் சுட்டுக் கொல்ல வேண்டும். நாங்கள் உங்களை துப்பாக்கியால் சுடுவோம் மற்றும் தடியடி நடத்துவோம் இவ்வாறு பேசிய நிலையில் மேலும் அவர் உங்களை சிறையில் தள்ளுவோம் என தெரிவித்தார். பாஜகவின் மூத்த தலைவர் திலீப் கோஷின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கபட்டு வருகின்றது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…