பொறியியல், மருத்துவ கல்லூரிகள் கண்காணிப்பு : பிரகாஷ் ஜவடேகர்..!
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் , போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் , தரமற்ற ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை இந்திய மருத்துவ மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் கண்காணித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர்,
மாணவர்கள் குறிப்பாக மருத்துவம் படிக்க கூடிய மாணவர்கள் இதனால் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் மத்திய அரசு எடுத்து வருவதாகவும் கூறினார்.