பொருளாதார பாதிப்புக்கு முக்கிய காரணம் மோடியின் பிரிவினை அரசியல்!
நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம்2017-18-ம் நிதியாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது. டந்த நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகி தம் 7.1 சதவீதமாக இருந்தது. உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்பட்ட சரிவு கரணமாக பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக கூறியுள்ளது.
இதுபற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பிரதமர் மோடியுடன் சேர்ந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை குறிக்கும் ஜிடிபியை 13 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமாக குறைத்து விட்டனர். இந்த பொருளாதார சரிவுக்கு பிரதமர் மோடியின் பிரிவினை அரசியலே காரணம். எனவே ஜிடிபியை மொத்த பிரிவினை அரசியல் என்றே கூறலாம். இதுமட்டுமின்றி நிதிப்பற்றாக்குறையும் முன்பு கூறியதை விடவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது’’ எனக்கூறியுள்ளார்.
source: dinasuvadu.com