“பொய்க்களை அவிழ்த்து விடும் பிஜேபி-யின் ஐடி விங்” கதற விட்ட நெட்டிசன்கள்..!!
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் நாடே கொந்தளிப்பான நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் மோடி ஆட்சியில் பெட்ரோல் டீசல் விலை குறைவாத்தான் உயர்ந்திருக்கிறது என மிக கூலாக கிராப் ஒன்றை தயார் செய்து பாஜக ஐடி விங்.. அதில் மோடியையும் டேக் செய்து பதிவேற்றம் செய்தது. இப்படி முட்டுக்கொடுப்பதால் மோடி மீதான அதிருப்த்தியை திசை திருப்ப முடியும் கணக்கு போடப்பட்டது. தவறான புள்ளி விபரங்களை கொடுத்து சரியான வளர்ச்சி வாதாடி வரும் பாஜக ஐடி விங் வழக்கம் போல் போட்ட பதிவில் கிராப் ஒன்றையும் சேர்ந்திருந்தது. அந்த கிராப் மோடியின் இமெஜை மேலே உயர்த்தும் என்ற எண்ணதில் பதிவிட அது தலைகீழாக மாறி கொஞ்சம் கோபம் குறைந்திருந்த மக்களையும் வெகுண்டு எழச்செய்திருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சியை விட தற்போது, இந்தியா முழுக்க பெட்ரோல் விலை ஏற்றம் குறைவாக உள்ளது. அதாவது விலை உயர்வு சதவிகிதம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை விட தற்போது குறைவாக இருந்து வருகிறது என அதற்கு விளக்கம் அளித்திருந்தது.
அதே நேரம் அப்போதிருந்த கச்சா எண்ணெய்யின் விலையை மறைத்து, பொய்யை உண்மையாக்க முயன்றனர். ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், அப்போது இருந்த கச்சா எண்ணெய் விலை மற்றும் தற்போது இருக்கும் கச்சா எண்ணெய் விலையையும் ஒப்பிட்டு ஒரு கிராப் ரெடி பண்ணி அதே பாணியில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அதில் மறக்காமல் மோடியையும் சேர்த்திருக்கின்றனர்.
அதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மே,2009லிருந்து மே,2014ம் ஆண்டு வரையிலான காலத்தில் கச்சா எண்ணெய் விலை 84% உயருந்த போது 40.62 ரூபாயிலிருந்து 71.41 ரூபாயாக மட்டுமே அதிகரித்திருந்தது.
ஆனால், பாஜக ஆட்சியில் மே, 2014லிருந்து செப்டம்பர் 2018ம் ஆண்டு வரையிலான காலத்தில் கச்சா எண்ணெய் விலை 34% குறைந்தும் பெட்ரோல் விலை தற்போது 80 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதை வரைபடமாக்கி பதிவிட்டுள்ளனர். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இப்போது எப்படி மீள்வது என தெரியாமல் பாஜக ஐடி விங் தவியாய் தவித்து வருகிறது.
DINASUVADU